அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்பவர்களை கண்டறியும் நோக்கில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் கட்டுப்பாட்டு விலை நடைமுறையில் இல்லை என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
பிற செய்திகள்