வடகடல் நிறுவனத்தினை முன்கொண்டு செல்ல அமைச்சர் டக்ளஸ் புதிய திட்டம்!

வட கடல் நிறுவனத்தின், வலை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றவர்களை, பங்குதாரர்களாக உள்ளடக்கி, தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன், வலைத் தொழிற்சாலைகளை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

லுணுவல தொழிற்சாலையை சேர்ந்த பணியாளர்களின் பிரதிநிதிகளை, இன்று, கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடிய போது, இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்காலிகமாக, 5 பணியாளர்களைக் கொண்ட குழுவுக்கான விபரங்களை தருமாறும், அதனூடாக, தொழிற்சாலை செயற்பாடுகளை தற்காலிகமாக முன்கொண்டு செல்வதற்கான ஒத்துழைப்பை வழங்குவதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

தோல்வி அடைந்த அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது தொடர்பாக, ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ள நிலையில், கடந்த கால அரசாங்கத்தின் வினைத்திறன் அற்ற செயற்பாட்டினால், பின்னடைவை சந்தித்துள்ள வட கடல் நிறுவனத்தையும், அந்நிறுவனத்தின் பணியாளர்களையும் பங்குதாரர்களாக கொண்டு, தனியார் முதலீட்டாளர்களை உள்ளீர்ப்பது தொடர்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், வட கடல் நிறுவனத்தின் லுணுவல வலை உற்பத்தி தொழிற்சாலை பணியாளர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமது பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

அவற்றை புரிந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி, உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *