குருநாகல், வஹெர பிரதேசத்தில் நீர் நிரம்பிய கால்வாயில் தவறி விழுந்து 14 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் மலியதேவ ஆதர்ஷ் மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்கும் குருநாகல் ஜயந்திபுர மாவட்டத்தைச் சேர்ந்த சசித்ர சேனாரத்ன என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றுக்கு வழிவிடுவதற்காக வீதியோரம் சென்ற போது கால்வாயில் தவறி விழுந்துள்ளார்.
இந்நிலையில், கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வாய்க்கால் அருகே புத்தகப் பை கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
குருநாகல் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது கால்வாயில் இருந்து மாணவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.