மனித பாவனைக்கு தகுதியற்ற இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் கையிருப்பு கொழும்பு பெட்டகொடோவவில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு கிடைத்துள்ளதாக கடைகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு மேலாக குளிர்சாதனப்பெட்டியில் உள்ள மீன்களை ரின்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடி வெளிநாடுகளில் நடப்பதாகவும், இலங்கைக்கும் அவ்வாறான கையிருப்பு கிடைத்துள்ளதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தையில் கிடைக்கும் டின் மீன் விலையை விட டின்னுக்கு 100 அல்லது 200 ரூபாய்க்கு குறைவாக இவை விற்கப்படுவதாகவும், இந்த டின் மீன்களை உட்கொள்வதால் உடல் நலக்குறைவு ஏற்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மனித பாவனைக்கு தகுதியற்ற மீன் டின்கள் அழிக்கப்பட உள்ளதாகவும், ஆனால் சில கடத்தல்காரர்கள் அவற்றை குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாகவும், இது சில காலமாக நடந்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்