ஐக்கிய தேசிய கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைவமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்றது.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாக இருக்கும் கட்சியின் ஆண்டு நிறைவு விழா இணைந்து கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.
இதில் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
மேலும் 1948ஆம் ஆண்டு நாட்டை கட்டியெழுப்ப டி.எஸ். சேனாநாயக்க அன்று அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்ததுபாேன்று எமது கட்சியின் 76ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன் புதிய பயணம் ஒன்றை மேற்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றாக பயணிக்க முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றும் கட்சியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்