உறுதிமொழிக் கடன் திட்டத்தின் கீழ் இரண்டு அரச வங்கிகளிடமிருந்து 2 பில்லியன் ரூபா பெறப்பட்டது, இது விவசாயிகளிடமிருந்து அதிகபட்ச உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் நீல் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சில தனியார் கொள்முதல் செய்பவர்கள் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய முயற்சிப்பது தடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
30,000 தொன் நெல்லை கொள்வனவு செய்வதும், போதுமான நெல் இருப்புக்களை பராமரிப்பதை உறுதி செய்வதே நெல் சந்தைப்படுத்தல் சபையின் இலக்காகும்.
இதற்கு இரண்டு அரச வங்கிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், ஒரு அரச வங்கி இந்த வாரம் முதல் தவணையை வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் விவசாயிகளிடம் நெல் இருப்புக்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான எரிபொருள் வசதிகள் இல்லாததால் பிரச்சினைகள் இருக்கிறது.
அதற்கமைவாக இவ்வருடம் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு அதிகளவு நெல் இருப்புக்கள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஒகஸ்ட் 18ஆம் திகதி முதல் விவசாயிகளின் அறுவடையை நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்முதல் செய்தது. சுமார் 15 நாட்களில் 7035 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பிற செய்திகள்