இடைக்கால பாதீட்டு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கே.டி.கமல் பத்மசிறி குறித்த குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் செயற்படுத்தப்படும் திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட அடிப்படையில் செயற்படுத்தப்படுகிறதா? என்பது தொடர்பில் இந்த குழு ஆராயவுள்ளது.
அத்துடன் குறித்த திட்டங்களுக்கான வசதிகளை அமைச்சுக்களின் ஊடாக வழங்க கூடியதாக உள்ளதா? மற்றும் மதிப்பிடப்பட்ட பணியாளர்களுக்கு மேலதிகமாக பணியாளர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனரா? என்பன தொடர்பில் குறித்த குழு ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்