ஹட்டன், செப். 9: மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழையால் மேல் கொத்மலை, லக்ஷபான, கெனியன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவும், லக்ஷபான, கனியன் நீர்த்தேக்கங்களின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், களனி கங்கை, களு கங்கை, நில்வளா கங்கை, மஹா ஓயா, அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், சிறியளவில் வெள்ளம் ஏற்படக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, இந்த ஆறுகளை அண்டிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.