அம்பாந்தோட்டை, செப் 6
உரக்கப்பல் தொடர்பான பிரச்சினையே சீனாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சரின் தலையீட்டின் பேரில் முறையான தீர்மானங்களை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ´சீன உரக் கப்பல் தொடர்பான பெரும் பிரச்சினை ஒன்றிற்கு நாம் முகம் கொடுக்கின்றோம். ஒருபுறம், சர்வதேச அளவில் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். சீனாவுடனான நல்லெண்ணத்தை சேதப்படுத்தியதற்கு முக்கிய காரணம் இந்த சீன உரக்கப்பல் தொடர்பானது என்று நான் நினைக்கிறேன். யார் மூலம் தவறிழைக்கப்பட்டிருந்தூலும், தற்போது அதற்கான இழப்பீட்டை நாடு செலுத்த வேண்டியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் தலையிட்டு, நல்லெண்ணத்தை முன்னெடுப்பதன் மூலம் நியாயமான முறையில் எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து, கடந்த வாரம் நிதிக் குழு, விவசாய அமைச்சிடம்; முன்மொழிவு செய்ய முடிவு செய்தது.´ என்றும் அவர் தெரிவித்தார்.