சர்வதேச நாணயநிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்த விபரங்களை அரசாங்கம் பொதுமக்களிற்கு தெரிவிக்ககூடாது என குறிப்பிட்டுள்ள பேராசிரியர் ரொகான் சமரஜீவ, உடன்படிக்கை குறித்த விபரங்களை பகிரங்கப்படுத்தினால் அது அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளிற்கு பாதிப்பை பாதகமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியொன்றிற்கான பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை தனக்கு கடன் வழங்கியவர்களுடன் இன்னமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதால் இலங்கைக்கும் சர்வதேச நாணயநிதியத்திற்கும் இடையிலான உடன்பாட்டினை பகிரங்கப்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது பேச்சுவார்த்தைகளில் ஒருபடியே முன்னோக்கி நகர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்களின் கடன்பேண்தகுதன்மை குறித்த விடயங்களை நாங்கள் பகிரங்கப்படுத்தினால் இலங்கைக்கு கடன்வழங்கியவர்கள் உட்பட அனைவரும் அனைத்துவிடயங்களும் வெளியாகிவிட்டன நாங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தேவையில்லை என தெரிவிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் அனுமதியை பெறுவதில் ஜாம்பியா இலங்கையை விட ஒன்பது மாதங்களில் முன்னிலையில் காணப்பட்டாலும் அந்த நாடு உரிய ஆவணங்களை பகிரங்கப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்