சிறந்த தொகுப்பாளருக்கான ‘எம்மி’ விருது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒபாமாவும் அவரது மனைவி மிச்செல்லும் இணைந்து ‘அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்’ என்ற பெயரில் இணைய தொடர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆவணப்படத்தில், உலகம் முழுவதும் உள்ள தேசிய பூங்காக்களின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தது. மொத்தம் ஐந்து பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த தொடரை ஒபாமாவே தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ‘எம்மி’ விருதுகள் வழங்கும் விழாவில் ‘அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்’ ஆவணப்படத்துக்காக ஒபாமாவுக்கு சிறந்த தொகுப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை ‘எம்மி’ விருதை பெற்ற இரண்டாவது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
1956-ஆம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டுவைட் டி. ஐசனோவர்ஸ் இந்த விருதை பெற்றுள்ளார்.