பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறப்படும் 65 வயதான ஒருவரை குறித்த பஸ்ஸில் பயணித்தவர்கள் பிடித்து காலி துறைமுக பொலிஸாரிடம் நேற்று (05) ஒப்படைத்துள்ளனர்.
30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், காலியிலிருந்து வீட்டுக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
குறித்த பெண் பஸ்ஸில் அமர்ந்திருந்தபோது அவரை சந்தேக நபர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபரான அஹங்கம பிரதேசத்தை சேர்ந்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருந்தனர்.
பிற செய்திகள்