பாகிஸ்தானில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் இலங்கை தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று (திங்கட்கிழமை) பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பாரூக் புர்கியிடம், வெளிவிவகார அமைச்சில் வைத்து இதனை கையளித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அமைச்சர் அனுதாபங்களை தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை பாகிஸ்தானுக்கு இலங்கை அரசாங்கத்தினும் மக்களின் ஆதரவு என்றும் இருக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.