இலங்கை,செப் 06
2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரின் SUPER FOUR சுற்றின் 3ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் இன்றைய போட்டியில் Charith Asalanka விற்கு பதிலாக Dhananjaya de silva இணைத்துக்கொள்ளப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது