நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிராக சிங்களத் தலைவர்கள் யாரும் வாய் திறக்க மாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கெ சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா அமர்வு தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
ஐ.நாவின் கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட அடக்குமுறைகள் மற்றும் இன அழிப்புக்கு,சர்வதேச நீதி மன்றில் தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று நாம் பல வருடங்களாக போராடி வருகின்றோம்.
இவ்வாறு இலங்கையை சர்வதேசத்தில் நிறுத்துவதற்கு தேவையான அணுகுமுறைகளை ஐ.நா இம்முறை மேற்கொள்ளும் என நாம் நம்புகின்றோம்.
தற்போது வரை உள்ளக விசாரணை நடைபெறவில்லை.இது 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்கிறது.உள்ளக விசாரணை நடத்துவோம் என அரசு ஏமாற்றி வருகிறது.அன்று நல்லாட்சி என்று சொல்லிக் கொண்ட ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி,தற்போதும் இடம்பெறுவதால்.எமக்கு தீர்ப்பு கிடைக்கப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிகிறது.
இது தவிர தற்போது சிங்களம் தமிழ் என்று பாகுபாடு இல்லாமல் அரசின் அடகு முறைகள் தொடர்கிறது.ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் வாய் திறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.ஆகவே நாம் தான் போராடி எமக்கான தீர்வை பெறவேண்டும் என்றார்.
பிற செய்திகள்