திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பயிரிடப்பட்ட மரக்கறிப்பயிர்களின் அறுவடை இன்று(06) அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரமவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
குறிப்பாக, மாவட்ட செயலக வளாகத்தில் மிளகாய், கத்தரி, தக்காளி, வெண்டி மற்றும் பாகல் உட்பட பல உணவுப்பயிர்கள் வெவ்வேறு கிளைகளால் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படாத இடங்களில் உணவுப்பயிர்களை பயிரிட்டு அதன் மூலம் நுகர்வுக்கு அவசியமானவற்றை அவரவர் உற்பத்தி செய்தலை ஊக்குவிப்படுண்தலின் ஒரு அங்கமாக இவ்வேலைத்திட்டம் மாவட்ட செயலகத்திலும் முன்னுதாரணமாக மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில், மாவட்ட விவசாய கிளை மூலம் பயிரிடப்பட்ட உணவுப்பயிர்களின் அறுவடையே இவ்வாறு நடைபெற்றது.சேதன பசளைகளை முற்றாக பயன்படுத்தி இப்பயிர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், விவசாயக்கிளை மூலம் உணவுப்பயிர் நாற்றுமேடையும் மாவட்ட செயலக வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருவதுடன் அவை சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன.
இப்பயிர் அறுவடையின்போது மாவட்ட விவசாய பணிப்பாளர் எம். குகதாசன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பிற செய்திகள்