மூன்று சக்கர வாகனங்களுக்கு Q.R திட்டத்தின் கீழ் வாரமொன்றுக்கு வழங்கப்படும் 05 லீற்றர் பெற்றோல் போதாது எனவும், இந்த நிலைமைகளினால் தாம் வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு வாரத்தில் தங்களின் முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றர் பெற்றோல் கிடைப்பதாகவும், அந்த அளவு பெற்றோல் தமக்கு வாடகைக்கு பயணிப்பதற்கு போதாது.
இந்த நிலைமைகள் காரணமாக முச்சக்கரவண்டிக்கான பிரீமியத்தை உரிய முறையில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமைகள் காரணமாக உணவுப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தமது முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 05 லீற்றர் பெற்றோல் வழங்குவதன் மூலம் நாளொன்றுக்கு 720 மில்லிலிற்றர் பெற்றோல் மாத்திரமே தமக்கு கிடைப்பதாகவும், வாடகைக்கு பயணிப்பதற்கு இந்த பெற்றோல் போதாது என்பதனால் உரிய அதிகாரிகள் அதனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
அவர்களின் மூன்று சக்கர வாகனங்களுக்கு வாரத்திற்கு குறைந்தது 10L பெற்றோல் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிற செய்திகள்