யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்று அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.
இச்சந்தர்பத்திலே தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்ததாவது ;
சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தி இராணுவத்தினரால் முகாமில் வழிமறிக்கப்பட்டு ,கடத்தி சென்று 11 பேரினால் மிகப் பயங்கரமாக மானவங்கத்திற்கு உட்படுத்தி கழுத்தை நெறித்துபடுகொலை. அவரினைத் தேடிச்சென்ற தயாரான குமாரசாமி இராசம்மா, மாணவியின் சகோதரனான பரியோவான் ,கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன், சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரைக் கொன்று புதைத்து ,செம்மணியினைப் புதைகுழி ஆக்கியிருந்தனர்.
1995 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் இலங்கை இராணுவத்தின் பிடியில் யாழ்.குடா நாடு வந்ததன் பின்னர் 600 க்கும் மேற்பட்டவர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு நடந்து இனப்படுகொலைகளுக்கு நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக நீதியினை கோரி நிற்கின்றோம்.
வடக்கு,கிழக்கில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பினை நிகழ்த்த வேண்டும் . தமிழ் தேசிய இனத்தினுடைய சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் இது நடைபெற வேண்டும் என்பதனை தமிழர் தாயகத்திலிருந்தும்,புலம்பெயர் தேசத்திலிருந்தும் வலிறுத்த வேண்டும்.
கிருஷாந்தி ,அவருடைய தயார் ,சகோதரன்,அயலவர் என படுகொலை செய்யப்பட்டவர்கள் உட்பட ,தமிழ் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் வீர வணக்கத்தினையும்,அஞ்சலியையும் செலுத்தி நிற்கின்றோம்.
நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும் ,அந்தவகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நெருங்குகின்ற இந்த நேரத்திலே ,நாங்கள் எங்களுடைய மண்ணினை ஆளக்கூடிய ஒரு தீர்வை வென்றெடுப்போம்.என்றார்.
பிற செய்திகள்