கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தினுள் பயணிகளிடம் யாசகம் பெற்ற பெண் ஒருவரின் மோசடி செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த பெண் பொம்மை ஒன்றை குழந்தை போன்று சுற்றி வைத்துக் கொண்டு பொது மக்களிடம் யாசகம் பெற்றுள்ளார்.
சோதனையிட்ட போது அந்த பெண் குழந்தை போன்று பொம்மையை வைத்து மக்களை முட்டாளாக்குவது தெரியவந்துள்ளது.
குழந்தைக்கு பால் மா பெற்றுக் கொடுப்பதற்கு வசதியில்லை என கூறி மக்களின் அனுதாபத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் குழந்தையை துணியால் சுற்றியிருக்கும் முறையினை பார்த்தால் குழந்தையால் மூச்சு விட முடியாதென நினைத்தே பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
இந்நிலையில் மக்களை ஏமாற்றி மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்த பொம்மை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அவரை எச்சரித்து விடுத்துவித்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறான நபர்களிடம் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் அதிகாரிகள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிற செய்திகள்