யாழ்.செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று செம்மணிப் பகுதியில் கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தி உட்பட செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமாக எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ்த் தேசியக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.