உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாசிமின் மனைவி உட்பட ஆறு பேரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
அதாவது,சஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா காதியா 2019 ஏப்ரலில் சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் பின்னர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த, சந்தேகநபர்கள் 6 பேரின் வருகையை ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக உறுதி செய்த பின்னர் அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் தற்போது பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்