கொழும்பு, செப் 8
யுனிசெப்(UNICEF) தெரிவிப்பதை போன்று இலங்கையில் போசாக்கு குறைபாடுகள் அதிகரிக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போசாக்கு குறைபாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்குள்ளான குடும்பங்களை கண்டறிந்து, அந்த குடும்பங்களுக்கு அவசர சத்துணவு திட்டத்தை செயற்படுத்த வேண்டியது அவசியம் எனவும் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.