வரியின்றி இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நேற்று (13) இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார், அங்கு 116 கிராம், 600 மில்லிகிராம் தங்கம் மற்றும் 94 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அது தொடர்பான பொருட்கள் பொலிஸாரினால் சுங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடவட பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்