மருந்துகளை முன்பதிவு செய்யும் செயற்பாடு; சுகாதார அமைச்சர் விடுத்துள்ள ஆலோசனை

ஒரு மாதத்துக்கு இலக்கு வைத்து மருந்துகளை முன்பதிவு செய்யும் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு இலக்கு வைத்து முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் நேற்று சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதோடு இதன்போதே குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் கிடைக்கப்பெறவுள்ளதாக இதன்போது தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply