இன்று முதல் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படும் தாமரைக் கோபுரம்

கொழும்பு, செப். 15: தாமரை கோபுரம் இன்று வியாழக்கிழமை முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகிறது. இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை சென்று தரை தளத்தில் அனுமதி சீட்டினை பெற்று பார்வையிட முடியும்.

10 வயதிற்கு குறைந்தவர்களுக்கு 200 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஏனையவர்களுக்கு 500 ரூபா முதல் 2000 ரூபா வரையிலும் அனுமதி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் நிர்மாணப்பணிகள், கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. 113 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 300 மீற்றர் உயரமுடைய இந்த தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த தாமரைக் கோபுரத்தை அமைக்க, சீன நிறுவனமொன்று 88.65 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியது. மிகுதியை இலங்கை அரசாங்கம் கொடுத்தது.

Leave a Reply