வீடொன்றில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவம்

பன்னிபிட்டிய, கொட்டாவ பிரதேசத்தில் இன்று வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

எஸ் ஜே புஹாதுபன்னிபிட்டிய, கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த வெடிவிபத்தில் வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் வீட்டில் வசிக்கும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

“அதிகாலை 04 மணியளவில் பலத்த சத்தம் கேட்டது. நாங்கள் உடனடியாக வெளியே செல்ல விரும்பாததால், சில நிமிடங்கள் கழித்து எங்கள் அறைக் கதவைத் திறந்தோம்.

அப்போது கேஸ் சிலிண்டர் வெடித்து அதிலிருந்து சத்தம் வருவதை உணர்ந்தோம். கூரையின் துண்டுகள் தரையில் சிதறிக் கிடந்தன. காஸ் சிலிண்டரில் ஏற்பட்ட பிரச்னையால் ஏற்பட்ட வெடிப்பு நிச்சயம். வெடித்த நேரத்தில் அந்த பகுதியில் யாரும் விழித்திருக்காததற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்,” என்று அந்த வீட்டைச் சேர்ந்த ஒரு பெண் விளக்கினார்.

இந்த மாதத்தில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நவம்பர் 04 ஆம் திகதி வெலிகம கப்பரதொட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு வெடித்ததில் மூவர் காயமடைந்தனர்.

நவம்பர் 16 ஆம் திகதி, இரத்தினபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும், விசாரணைகளில் வாயு வெடிப்பு சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

நவம்பர் 20 ஆம் தேதி, கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உணவகத்தில் எரிவாயு வெடித்ததில் மூன்று பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

Leave a Reply