மாவீரர்களை நினைகூற முடியும்: திருத்திய கட்டளையை பிறப்பித்த முல்லைத்தீவு நீதிமன்றம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அறுபத்தொன்பது பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான தடை உத்தரவை நீக்கக்கோரி நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு விசாரணைகள் இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதற்கமைய, நீதிவான் மாவீரர்களை நினைகூற முடியும் என திருத்திய கட்டளையை பிறப்பித்துள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளை ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி ஐயன்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கைக்கமைய குறித்த அறுபத்தொன்பது பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கில், முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் ஆயராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply