நாடாளுமன்றில் நேற்று மாவீரர்களுக்கு அஞ்சலி!

“தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்த புனிதமான மாவீரர்களுக்கு இந்த சபையில் வைத்து வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பில் அவர் கூறியதாவது,
“தமிழர்களைப் பொறுத்தவரை இந்த மாதம் மிக முக்கிய – புனிதமான மாதமாகும்.

தமிழ் மக்களின் உரிமைக்காகவும், தமிழர்கள்மீது சுதந்திர காலம் தொட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராகவும் அதனை தடுப்பதற்காகவும் போராடி, தமிழ் மக்களுடைய தேசம் அதனுடைய இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் அரசியல் தீர்வு கிடைத்தால், அதன்மூலம் அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தும் எதிர்பார்ப்போடு உயிர்த்தியாகம் செய்த புனிதமான மாவீரர்களை நினைவுகூரும் மாதம் இது.

இந்த சந்தர்ப்பத்தில், இந்த அவையிலேயே அந்த மாவீரர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

Leave a Reply