வவுனியா மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர தகவல்

வவுனியாவில் உள்ள அனேக குளங்கள் வான் பாய்வதன் காரணமாக திருநாவற்குளம், கூமாங்குளத்தின் சில பகுதிகள், மதுராநகர், நெடுங்கேணி போன்ற பிரதேசங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

மேலும் பாவற்குளத்தின் வான்கதவுகளின் ஊடாக செல்லும் நீரின் அளவை அதிகரிக்க மேலும் கதவினை திறக்கும் அளவினை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வவுனியா நெளுக்குளம், செட்டிகுளம் பிரதான வீதியானது இன்று இரவு 9.00 மணி தொடக்கம் நாளை காலை 5.00 மணி வரை மூடப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகளில் ஒரு கதவானது நேற்று இரவு 09.00 மணிக்கு திறக்கப்பட்டதுடன் ஏனைய 3 கதவுகளும் இன்று இரவு 9.00 மணிக்கு திறக்கப்படவுள்ளது.

மேலும் பாவற்குளம் மற்றும் பேராறு நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அடை மழைகாரணமாக 31 குடும்பங்களை சேர்ந்த 115 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

வவுனியாவில் 03 குடும்பங்களை சேர்ந்த 11 அங்கத்தவர்களும், வவுனியா வடக்கில் 19 குடும்பங்களை சேர்ந்த 66 அங்கத்தவர்களும், தெற்கில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 03 அங்கத்தவர்களும், வெங்கலசெட்டிகுளத்தில் 08 குடும்பங்களை சேர்ந்த 35 அங்கத்தவர்களும் நான்கு பிரதேச செயலகங்களில் 31 குடும்பங்களை சேர்ந்த 115 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 03 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply