இலங்கை – இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்! சித்தார்த்தன் கோரிக்கை

1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

சர்வதேச நாடுகளுடன் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதில் 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தம் மிக முக்கியம்.

எந்த அரசு வந்தாலும் அதனை முழுமையாக நடைமுறைபடுத்த வேண்டும். அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்படக்கூடாது.

அவ்வாறு இன்னும் நடக்கவில்லை. நடந்தால் அது நாட்டுக்கு உகந்த விடயமாக இருக்காது எனத் தெரிவித்தார்.

கடன்களை பெற்றுக் கொண்டதை தவிர அதன் மூலம் ஒன்றும் செய்யவில்லை: நல்லாட்சியை விளாசித் தள்ளிய மஹிந்த!

Leave a Reply