இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு!

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலைக் காரணமாக இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் 2 அடி உயரத்திற்குத் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையால் நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்களை மிக அவதானமாக செயல்படுமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் ஒரு அடி உயரத்திற்குத் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply