நாட்டில் முடங்கும் வைத்தியசாலைகள் – சுகாதாரப் பிரிவு போராட்டம்

மருத்துவப்பொருட்களின் விலையை குறைக்கவேண்டும் மற்றும் சுகாதார பணியாளர்களின் வேதன முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி 16 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு நாளை காலை வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் சேவைகளில் இருந்து விலகியுள்ளதாக செவிலியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டின் பல வைத்தியசாலைகளின் பணிகள் இயல்பை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு உரிய தீா்வு வழங்கப் படாது விடின் , எதிர்வரும் 30ஆம் திகதியில் இருந்து முழுமையான பணிப்புறக்கணிப்புக்கு செல்லவுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply