சுற்றுலாத் துறையை ஈர்க்கும் முகமாக ‘Save the Sri Lankan Smile’ பிரசாரம் ஆரம்பம்!

இலங்கை சுற்றுலாத்துறையின் பங்குதாரர்கள், இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு விரைவான மற்றும் பயனுள்ள மீட்சியைக் கொண்டுவரும் நோக்கத்துடன் “Save the Sri Lankan Smile” பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த பிரச்சாரத்தின் மூலம் எதிர்வரும் குளிர்காலத்தில் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை எதிர்பார்க்கிறது.

இந்த பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இந்த ஆண்டில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலா வருவாயையும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வருகையையும் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.

சுவிஸ் ஏர், அசுஸ் ஏர், ரஷ்யாவைச் சேர்ந்த ஏரோஃப்ளோட், ஏர் பிரான்ஸ் போன்ற பல விமான நிறுவனங்கள் கொழும்பை தங்கள் வழித்தட வலையமைப்பில் சேர்த்துள்ளதாகவும், இது சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்றும் அவர் கூறினார்.

“Save the Sri Lankans Smile” என்ற பிரசாரமானது அதன் சொந்த Instagram/Facebook பக்கங்கள், YouTube மற்றும் இணையத்தளங்கள் மூலம் வளப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply