கைநழுவிப் போகும் மற்றுமோர் தமிழர் பிரதேசம்- அம்பலப்படுத்திய முக்கியஸ்தர்!

வவுனியா நகர சபை , மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வவுனியா என்னும் பெயர் ‘ வவுனியாவ ‘ என்று மாற்றப்பட்டுள்ளது .

இது தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டுமென்றும் , உரிய திருத்தத்தை மேற்கொள்ளவேண்டுமென்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் , வடக்கு மாகாண பிரதம செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடி தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இந்த விடயம் தொடர்பாக பிரதமர் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவர் கள் , மாகாண சபைகள் மற்றும் உள் ளூராட்சி அமைச்சரால் வெளியிடப் பட்ட 06 / 09 / 2022 ஆம் திகதி 2296/05 ஆம் இலக்க வர்த்தமானி பத்திரிக்கைக்கு தங்கள் அவதானம் கோரப்படுகின்றது .

வரலாற்று ரீதியாக இந்த உள்ளூராட்சி மன்றத்தின் பெயர் தமிழில் ” வவுனியா ” என்றும் , ஆங்கிலத்தில் ” வவுனியா ” என்றும் அறியப்பட்டும் , பதியப்பட்டும் வந்துள்ளது . ஆங்கிலத்தில் ” வவுனி யாவ ” என்று பிரசுரிப்பது தவறானதும் , வரலாற்றுப் பிறழ்வானதுமாகும் .

” வவுனியா ” என்ற தமிழ் பிரதேசத்தின் வரலாற்றுப் பெயரை ” வவுனியாவ ” என ஆங்கிலத்தில் அறியப்படுத்து வதோ . பதியப்படுவதோ தவறானது என்பதைப் பொது நிர்வாக , உள்நாட்ட லுவல்கள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கவனத்துக் குக் கொண்டு வந்து . ” வவுனியா ” என ஆங்கிலத்தில் உரிய திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கக் கோரும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது .

பிறசெய்திகள்

Leave a Reply