சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரி கொட்டகலையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

நுவரெலியா- கொட்டகலையில் சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹற்றன்- நுவரெலியா பிரதான வீதியில், கொட்டகலை யூலிப்பீல்ட் சந்தியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியிலுள்ள தோட்ட தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் என சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமியான ஹிஷாலினி,  கடந்த மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை  தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply