ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இந்தியா தலைமையேற்றது!

ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இதனையடுத்து ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குத் தலைமையேற்கும் முதல் இந்தியப் பிரதமர் என்னும் பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நிலையான உறுப்பு நாடுகளும் மற்ற 10 உறுப்பு நாடுகளும் உள்ளன.

பாதுகாப்பு சபைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு உறுப்பு நாடு தலைமையேற்கும். இதன்படி ஒகஸ்ட் மாதத்திற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது.

இந்தப் பதவிகாலத்தில் ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்க உள்ளதாக ஐ.நாவுக்கான முன்னாள் இந்திய தூதர் சையது அக்பருத்தீன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply