வடக்கில் 30 வயதுக்கு மேற்பட்ட 56 சதவீதமானோர் தடுப்பூசி பெற்றனர்

வடக்கு மாகாணத்தில் நேற்று (01) வரை 30 வயதிற்கு மேற்பட்ட 56 வீதமானவர்களிற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விபரம் வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் நேற்று (01) வெளியிடப்பட்டது.

இதன்படி யாழ். மாவட்டத்தில் 19 ஆயிரத்து 850பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 194 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 513 பேரும் என, மொத்தம் 31 ஆயிரத்து 557 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் 6 இலட்சத்து 57 ஆயிரத்து 547 என கணக்கிடப்பட்டுள்ளது.

நேற்று வரை வடக்கில் 3 இலட்சத்து 67 ஆயிரத்து 240 பேர் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

இது மொத்த எண்ணிக்கையின் 56 சதவீதமாகும்.

Leave a Reply