சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் நாட்டுக்கு அவசியம் – கல்வி அமைச்சர்

தற்போதைய சூழ்நிலையில் சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் நாட்டுக்கு அவசியம் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற நிகழ்ச்சில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது மனிதாபிமானமற்ற முறையில் அவர்களை நடத்துவது துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு போன்ற சமீபத்தைய நிகழ்வுகள் அதற்கான அவசியத்தை எடுத்து காட்டுவதாக தெரிவித்தார்.

எனவே சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் இந்த காலகட்டத்தில் தேவை என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தினார்.

இதேவேளை அரசாங்கம் இது தொடர்பாக பல முடிவுகளை எட்டியுள்ளது, அதே நேரத்தில் பல சட்டங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

Leave a Reply