கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் தொற்று!

கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புரந்தர் என்ற பகுதியை சேர்ந்த ஐம்பது வயது பெண் ஒருவருக்கே ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த பெண் பூரணமாக குணமடைந்துள்ளமையால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதேவேளை ஏடிஸ் வகை நுளம்புகளால் பரவும் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் பலருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply