உலகின் அதிவேக மனிதராக மார்செல் ஜேக்கப்ஸ் சாதனை!

டோக்கியோ ஒலிம்பிக்கில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்த 100 மீற்றர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.

உலகின் அதிகவேக மனிதராக இத்தாலியின் லாமண்ட் மார்செல் ஜேக்கப்ஸ், பந்தயத் தூரத்தை 9.80 வினாடிகளில் கடந்து தங்கபதக்கத்தை வென்றார்.

இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் இத்தாலிய வீரரொருவர் 100 மீற்றர் பந்தயத்தை தங்கபதக்கத்தை வெல்வது இதுவே முதல்முறையாகும்.
இவரையடுத்து அமெரிக்காவின் ஃப்ரெட் கெர்லி, பந்தயத் தூரத்தை 9.84 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.

மூன்றாவது இடத்தை பிடித்த கனடாவின் ஆண்ட்ரே டி கிராஸ், பந்தயத் தூரத்தை 9.89 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கத்தை வென்றார்.


இதேபோல பெண்களுக்கான 100 மீற்றர் பந்தயத்தில், ஜமைக்காவின் தாம்சன் ஹேரா, பந்தயத் தூரத்தை 10.61 வினாடிகளில் கடந்து தங்கபதக்கத்தை வென்றார்.

இவரையடுத்து ஜமைக்காவின் ஆன் ஃப்ரேசர் ப்ரைஸ், பந்தயத் தூரத்தை 10.74 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.

மூன்றாவது இடத்தை பிடித்த ஜமைக்காவின் ஷெரிக்கா ஜாக்சன், பந்தயத் தூரத்தை 10.76 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கத்தை வென்றார்.

Leave a Reply