யாழில் 4 நாட்களில் 83 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

யாழ். மாவட்டத்தில் நான்கு நாட்களில் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

யாழில் மூன்றாம் கட்டமாக முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் 4 நாட்களில் 83 ஆயிரத்து 342 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 29 ஆம் திகதி 18 ஆயிரத்து 46 பேருக்கும், கடந்த 30 ஆம் திகதி 22 ஆயிரத்து 22 பேருக்கும், நேற்று முன்தினம் (31) 23 ஆயிரத்து 424 பேருக்கும், நேற்று (01) 19 ஆயிரத்து 850 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று வரை வடக்கில் (30 வயதுக்கு மேற்பட்ட) 3 இலட்சத்து 67 ஆயிரத்து 240 பேர் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

இது மொத்த எண்ணிக்கையின் 56 சதவீதமாகும்.

Leave a Reply