ஆப்கானிஸ்தானின் மூன்று முக்கிய நகரங்களில் தலிபான்கள் உக்கிர தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் ஹெராத், லஷ்கர் கா, காந்தஹார் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் தலிபான்கள் உக்கிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் அரசப் படைகளால் எவ்வளவு நேரம் தலிபான்களின் தாக்குதல்களுக்கு தாக்குபிடிக்க முடியும் எனத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான காந்தஹாரில் உள்ள விமான நிலையத்தை, குறைந்தபட்சம் மூன்று ஏவுகணைகள் தாக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

காந்தஹார் மாகாணம் தலிபான்களின் பிடியில் செல்லும் அபாயம் இருப்பதாக, அம்மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்நகரத்தை தங்களின் தற்காலிக தலைநகராக்கிக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காந்தஹார் அவர்கள் வசமானால், அப்பிராந்தியத்தில் இருக்கும் ஐந்து அல்லது ஆறு மாகாணங்களும் அவர்கள் வசமாகிவிடும்.

ஈரான் மற்றும் பாகிஸ்தான் உடனான ஆப்கானிஸ்தானின் முக்கிய எல்லைப் பகுதிகள் அடங்களாக நாட்டில் பாதி பகுதிகளைக் தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். தலிபான்கள் தொடர்ந்து தங்கள் தாக்குதல் மூலம் முன்னேறி வருவதால், எதிர்வரும் மாதங்களில் பெரிய நெருக்கடி ஏற்படலாம் என மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்துள்ளன.

Leave a Reply