வலி. மேற்கு பிரதேச சபைக்கு முன்னால் தனிநபர் போராட்டம்

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளி இராதாகிருஷ்ணன் சிவகுமார் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவ்விடயம் தொர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நிரந்தர ஊழியரான நான் கடந்த 2015 ஆம் ஆண்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டேன்.

15 மாதங்களின் பின்னர் விசாரணைகள் எதுவுமின்றி மீண்டும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டேன்.

பின்னர் மது போதையில் கடமையில் இருந்ததாக கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு வேலையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டேன்.

நான் நீதிமன்றத்தை நாடிய போதும் பிரதேச சபை நீதிமன்றத்துக்கு சரியான முறையில் சமுகமளிப்பதில்லை.

இதனால் நான், பிரதேச சபையின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்கள் அல்லது சட்டத்தரணிகள் அல்லது சமாதான நீதவான் முன்னிலையில் எனது பிரச்சினைகளை விசாரணை செய்யுமாறு கூறினேன்.

ஆனால் பிரதேசசபை அந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

2018 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மூன்று வருடங்கள் நான் விசாரணைகள் எதுவுமில்லாமல் வேலையும் இல்லாமல் இருக்கின்றேன்.

இந்நிலையில்; நான், எனக்கான நீதியை வேண்டி, பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

Leave a Reply