அர்ஜுன் அலோசியஸிற்கு எதிரான வழக்கு செப்டம்பரில் விசாரணைக்கு!

<!–

அர்ஜுன் அலோசியஸிற்கு எதிரான வழக்கு செப்டம்பரில் விசாரணைக்கு! – Athavan News

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதற்கிடையில், செப்டம்பர் 6 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வழக்கின் இரண்டாவது சாட்சிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply