கொரோனா மூன்றாவது அலை : ஒகஸ்ட் மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை இந்த மாதத்திலேயே (ஒகஸ்ட் மாதத்தில்)  ஏற்படக்கூடும் என ஐஐடி ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கணித அடிப்படையில் நடத்தப்பட்ட அவர்களது ஆய்வின்படி, 3 ஆவது அலை ஆரம்பிக்கும்போது தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது அலையின்போது தினசரி தொற்று நான்கு இலட்சத்தை தாண்டியதுபோன்று  3ஆவது அலை தீவிரமாக இருக்காது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

10 மாநிலங்களில் புதிய தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு இருப்பதாக மத்திய அரசு சமீபத்தில் கூறியது. 10 சதவீதத்திற்கும் அதிகமான நேர்மறையான விகிதம் கொண்ட மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளையும் ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

Leave a Reply