துருக்கி காட்டுத்தீ: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்வு!

துருக்கியின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

தெற்கு நகரமான மானவ்காட்டில் காட்டுத்தீ காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததன் மூலம் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், 10பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் பஹ்ரெட்டின் கோகா தெரிவித்துள்ளார்.

தீயணைப்பு வீரர்கள் ஐந்தாவது நாளாக கடலோர ரிசார்ட் நகரங்களில் தீயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.

துருக்கியில் கடந்த ஐந்து நாட்களில் பரவிய 100க்கும் மேற்பட்ட தீ விபத்துக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், மனாவ்கட் மற்றும் மர்மாரிஸ் மற்றும் மிலாஸின் நகரத்தில் தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது என்று வனத்துறை அமைச்சர் பெக்கீர் பக்தெமிர்லி கூறினார். இதனால் சில குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

புகழ்பெற்ற ரிசார்ட் நகரமான போட்ரமில், தீப்பிழம்புகள் பரவி, புகை மூட்டம் வானத்தை நிரப்பியதால், சுற்றுலா பயணிகள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் குழு, படகு மூலம் வெளியேற்றப்பட்டது,

வனத்துறை அமைச்சக தகவல்களின்படி, இந்த தீ ஏற்கனவே மனாவ்காட்டில் ஐந்து பேரின் உயிரையும், மர்மாரிஸில் ஒரு நபரையும் சமீபத்திய நாட்களில் காவு கொண்டது.

புதன்கிழமை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்களுக்கு உதவ உள்ளூர் மற்றும் ரஷ்யா, உக்ரைன், ஈரான் மற்றும் அஸர்பைஜான் ஆகிய நாடுகளின் ஆதரவு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

சேதமடைந்த வீடுகளை புனரமைக்கவும், தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கவும் துருக்கி அரசாங்கம் உறுதியளித்தது.

குறைந்தபட்சம் 13 விமானங்கள், 45 ஹெலிகொப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் 828 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன என்று பக்டெமிர்லி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *