ஆரோக்கியமான பயணிகள் போக்குவரத்திற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பு – ஹேமந்த ஹேரத்

உரிய சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் அதற்கான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் கூறினார்.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடங்கியவுடன், மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் சுகாதார நடைமுறைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஹேமந்த ஹேரத் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply