சிறுவர்களை வீட்டில் பணிக்கமர்த்தியுள்ளவர்களுக்கு எச்சரிக்கை!

வீட்டு வேலைகளில் குறைந்த வயதுடைய சிறுவர்களை ஈடுபடுத்தியிருக்கும் வீட்டு உரிமையாளர்கள், அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வகையில் இவர்களை மீள அனுப்பாதவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியல் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எதிர்காலத்தில் சகல கிராம அதிகாரிகள் பிரிவுகள் தோரும் ஒரு சமூக பொலிஸ் அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். அவர்கள் சிறுவர் பாதுகாப்பு பொலிஸ் பிரிவுடன் இணைந்து இதுதொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

தற்போது மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ளதால் வீட்டு உரிமையாளர்கள் தமது குறைந்த வயது சேவகா்களை திருப்பி அனுப்புவதில் சிரமம் இருக்காது” என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *