வேல்ஸை ஸ்கொட்லாந்துடன் இணைக்கும் புதிய விமான சேவை ஆரம்பம்!

வேல்ஸை ஸ்கொட்லாந்துடன் இணைக்கும் ஒரு புதிய பிராந்திய விமானப் பாதை இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.

இதன்படி, கார்டிஃப் முதல் எடின்பர்க் வரை லோகானேயார் விமானங்கள், வாரத்திற்கு ஐந்து முறை இயக்கப்படும்.

மார்ச் 2020இல் ஃப்ளைப் விமான நிறுவனம், வீழச்சியை சந்தித்த பிறகு இந்த புதிய மாற்றம் வருகின்றது.

அதாவது, வேல்ஸ் தலைநகரம் மற்றும் எடிபர்க் இடையே பிரித்தானியாவில் உள்ள பல பிராந்திய பாதைகள் தொலைந்துவிட்டன.

நகரங்களுக்கிடையேயான முதல் லோகானேயார் விமானம், இன்று எடின்பர்க்கிலிருந்து 14:30 பி.எஸ்.டி.க்கு கார்டிஃப் சென்று 16:20 மணிக்கு ஸ்கொட்லாந்து தலைநகருக்கு திரும்பும்.

ஸ்கொட்லாந்து விமான நிறுவனமான லோகானேயார், புதிய பாதை ஃப்ளைப் விமான நிறுவனம், விட்டுச்சென்ற இடைவெளியை நிரப்பும் என தெரிவித்துள்ளது.

Leave a Reply