7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்

கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவர் உதயரூபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில், நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை அமுல்படுத்தாதே, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்து, இலவச கல்வியை இராணுவமயமாக்காதே ஆகிய சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை  ஏந்தி, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

காந்தி பூங்காவில் காலை 10 மணிக்கு ஆரம்பமான ஊர்வலம்,   நகர் மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்தின் ஊடாக கோட்டமுனை பாலம் ஊடாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் முன்னாள் இருக்கின்ற சுற்றுவட்டம் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் காந்திப் பூங்கா வரை வந்தடைந்ததன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *